மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சாவு

வேதாரண்யத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சாவு;

Update:2023-03-16 00:15 IST

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சரகம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராணி (வயது53). இவர் தன் வீட்டு விசேஷத்திற்கு உறவினர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். கோவில்பத்து கிராமத்தில் தனது உறவினரிடம் சொல்லி விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறும் போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேட்டைக்காரனிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்