ரெயிலில் அடிபட்டு பெண் பலி

ரெயிலில் அடிபட்டு பெண் இறந்தார்;

Update:2022-09-30 03:12 IST

நெல்லை அருகே உள்ள கரையிருப்பு கிராமத்தை சேர்ந்த வேல் என்பவருடைய மனைவி சுப்பம்மாள் (வயது 78). இவர் நேற்று அந்த பகுதியில் ரெயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டு தண்டவாளம் அருகே உடல் சிதறி பிணமாக கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்து சுப்பம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்