நின்ற டிராக்டர் மீது ஆட்டோ மோதி பெண் சாவு

நின்ற டிராக்டர் மீது ஆட்டோ மோதிய விபத்தில் பெண் இறந்தார்.

Update: 2023-04-06 18:45 GMT

மதுரை மாவட்டம் கல்மேடு ஆண்டார்கோட்டத்தை சேர்ந்த முருகன் மனைவி காமாட்சி (வயது 60), கருப்பாயூரணி மயூரா தேவி (39), உமா(37), கல்மேடு முத்தாயி (67), மதுரை பாண்டி கோவில், ஜே.ஜே. நகர் ஈஸ்வரி (35) ஆகியோர் ஒரு ஆட்டோவில் சிவகங்கையை அடுத்த கொல்லங்குடியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்தனர். ஆட்டோவை மதுரை காமராஜர் காலனி ஆனந்த கிருஷ்ணன் (47) ஓட்டி வந்தார். அவர்கள் சாமிகும்பிட்டு விட்டு மீண்டும் மதுரைக்கு ஆட்டோவில் சென்றனர். சிவகங்கையை அடுத்த பில்லூர்-கரும்பாவூர் இடையே சென்றபோது அங்கு பழுதாகி நின்ற டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த அனைவரும் படுகாயம் அடைந்தனர். அதில் காமாட்சி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மற்ற 5 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்