ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

ராணிப்பேட்டை அருகே ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-18 17:52 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்தி. கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி (வயது 33). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

கார்த்திக்கிற்கும் அவரது மனைவி செல்வராணிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இதனால் மனமுடைந்த செல்வராணி, வாலாஜா ரோடு அம்மூர் ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்தார்.

அப்போது சென்னை நோக்கி வந்த ஆலப்புழா ரெயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ரெயில் நிலைய அதிகாரிகள் காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் செல்வராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்