கடன் தொல்லையால் பெண் தற்கொலை

கடன் தொல்லையால் பெண் தற்கொலை

Update: 2022-12-04 18:45 GMT

கன்னியாகுமரியில் கடன் தொல்லையால் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெண் தற்கொலை

கன்னியாகுமரி சகாய மாதா தெருவை சேர்ந்தவர் ராபின்சன் (வயது 48), மீனவர். இவருடைய மனைவி ரேகா (40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராபின்சன், ரேகா ஆகியோர் வழக்கம் போல் தூங்க சென்றனர். நேற்று காலை ராபின்சன் கோவிலுக்கு செல்வதற்காக எழுந்து பார்த்தபோது ரேகாவை காணவில்லை. உடனே அவர், மாடிக்கு சென்றார். அப்போது அங்கு உள்ள அறையில் ரேகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

கடன் தொல்லை

இதனால் அதிர்ச்சி அடைந்த ராபின்சன் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கடன் தொல்லையால் ரேகா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்