பெண் தீக்குளித்து தற்கொலை
ஆசாரிபள்ளத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
ஆசாரிபள்ளத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் வெள்ளமண் ஓடை பகுதியை சேர்ந்தவர் பென்சிகர் ராஜ். இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சகாய செல்வி. இவர்களுக்கு 3 மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆஸ்வினுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனை தாயார் சகாய செல்வி கண்டித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ஆஸ்வின் வீட்டிற்கு மது போதையில் வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சகாய செல்வி வீட்டில் உள்ள மண்எண்ணெய் கேனை எடுத்து தனது உடல் முழுவதும் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.