எடப்பாடியில் தீயில் கருகிய பெண் ஆஸ்பத்திரியில் சாவு-மின்தடைக்காக கொளுத்தி வைத்த மெழுகுவர்த்தி உயிரை பறித்தது

எடப்பாடியில் தீயில் கருகிய பெண் ஆஸ்பத்திரியில் பலியானார். மின்தடைக்காக கொளுத்தி வைத்த மெழுகுவர்த்தி அந்த பெண்ணின் உயிரை பறித்தது.

Update: 2023-03-30 21:59 GMT

எடப்பாடி:

தூய்மை பணியாளர்

எடப்பாடி சின்னமணலி மேற்கு தெருவை சேர்ந்தவர் சசிகுமார். எடப்பாடி நகராட்சியில் தூய்மை பணியாளராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி மாலதி (வயது 21). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் மின்தடை ஏற்பட்டதால் மெழுகுவர்த்தியை மாலதி எரிய வைத்து இருந்தார். அவர் விரித்து இருந்த படுக்கை விரிப்பில் மெழுகுவர்த்தி சாய்ந்து விழுந்ததாக தெரிகிறது.

தீயில் கருகி சாவு

அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் மாலதி பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். மாலதியை மீட்டு எடப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் மாலதி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மாலதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மாலதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆவதால் சங்ககிரி உதவி கலெக்டர் சவுமியா விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்