பெண்ணை தாக்கி நகை, ரூ.22 லட்சம் பறிப்பு

உத்தனப்பள்ளி அருகே பெண்ணை தாக்கி நகை, ரூ.22 லட்சம் பறித்த மருமகள் உள்பட 3 பேர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-07-19 18:45 GMT

ராயக்கோட்டை

குடும்ப தகராறு

தேன்கனிக்கோட்டை தாலுகா சிகரலப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மனைவி தேவம்மா (வயது57). இவர்களின் மகன் ரமேஷ்பாபு (37). இவருக்கும், காவியா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் யாசின் கவுடா என்ற மகன் உள்ளார். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் காவியா கடந்த 4 ஆண்டுகளாக தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெரிய பென்னங்கூரில் வசித்து வந்தார். இந்த நிலையில் ரமேஷ்பாபு மனைவியின் வீட்டில் இருந்த மகனை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

3 பேர் மீது வழக்கு

இதையடுத்து காவியா மற்றும் மேலும் 2 பேர் காரில் ரமேஷ்பாபுவின் வீட்டிற்கு வந்தனர். அங்கு அவர்கள் தேவம்மாவை தாக்கி விட்டு குழந்தை யாசின் கவுடாவை அழைத்து சென்றனர். மேலும் ரமேஷ்பாபுவின் தாய் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலி, வீட்டில் இருந்த ரூ.22 லட்சம் பணத்தையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து தேவம்மா உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் காவியா மற்றும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்