ஆட்டோ டிரைவரிடம் பணம் திருடிய பெண் கைது
செஞ்சியில் ஆட்டோ டிரைவரிடம் பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.;
செஞ்சி
செஞ்சி அருகே சோழங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் உத்திரகுமார் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவர் செஞ்சி கூட்டுரோடு அருகே தனது ஆட்டோவில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் உத்திரகுமாருடன் பேச்சு கொடுத்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து உத்திரகுமார் அருகில் இருந்த கடைக்கு டீக்குடிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது உத்திரகுமார் தனது ஆட்டோவில் வைத்திருந்த ரூ.500-ஐ காணவில்லை. அதனை அந்த பெண் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் ஆட்டோவில் இருந்த பணத்தை திருடியது திண்டிவனம் அருகே உள்ள கொள்ளார் கிராமத்தை சேர்ந்த ஜேம்ஸ் மனைவி அருணா (28) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.