பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோபியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

கோபியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது.

Update: 2023-04-16 21:40 GMT

கடத்தூர்

கோபியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது.

அனுமதி

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்து, ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் சென்னை உள்பட 45 இடங்களில் நேற்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது.

ஊர்வலம்

இதையடுத்து ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று மதியம் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை ஈரோடு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி பாலசிவகுமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கோபி வாய்க்கால் ரோடு ஸ்ரீவித்யா பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பார்க் வீதி, அரசு ஆஸ்பத்திரி வீதி, கச்சேரி வீதி, ஈரோடு- சத்தி மெயின் ரோடு வழியாக முத்துமகாலில் மாலை 4.30 மணி அளவில் முடிவடைந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 27 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 750-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஊர்வலம் சென்றபோது இருபுறமும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக சென்றனர். முக்கியமான பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்