பஸ் நிலையம் செல்லும் சாலை அகலப்படுத்தப்படுமா?
வடபாதிமங்கலத்தில் பஸ் நிலையம் செல்லும் சாலை அகலப்படுத்தப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.;
கூத்தாநல்லூர்;
வடபாதிமங்கலத்தில் பஸ் நிலையம் செல்லும் சாலை அகலப்படுத்தப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
பஸ் நிலையம்
கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் பஸ் நிலையம் உள்ளது. இங்கு தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கும்பகோணம், கொரடாச்சேரி, குடவாசல், கோட்டூர், சேந்தங்குடி, விக்ரபாண்டியம் போன்ற ஊர்களுக்குச் செல்லக்கூடிய பஸ்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்படுகின்றன. இந்த பஸ் நிலையம் சுமார் 80 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இருப்பினும் இன்னமும் பஸ்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாமலேயே இருந்து வருகிறது. இந்த பஸ் நிலையத்தின் உள்ளே சென்று வெளியே வருவதற்கு சாலை உள்ளது.
அகலப்படுத்த கோரிக்கை
இந்த பஸ் நிலைய சாலை மிகவும் குறுகலாகவே இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், ஆபத்தான வளைவுகளும் உள்ளது.இதனால் பஸ் நிலைய சாலையில் செல்லக்கூடிய பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருவதாக வாகன ஓட்டிகள் கூறுகிறார்கள்.எனவே வாகனங்கள் எவ்வித சிரமமும் இன்றி சென்று வர வசதியாக வடபாதிமங்கலத்தில் பஸ் நிலைய சாலையை அகலப்படுத்தி முழுமையான தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.