மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செல்லும் சாலை சீரமைக்கப்படுமா?

கரைமேடு ஊராட்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செல்லும் சாலை சீரமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-09-17 18:45 GMT

சீர்காழி:

கரைமேடு ஊராட்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செல்லும் சாலை சீரமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

வாகன ஆய்வாளர் அலுவலகம்

சீர்காழி அருகே கரைமேடு ஊராட்சியில் அண்ணன் பெருமாள் கோவிலில் தமிழக அரசு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிடம் உள்ளது.

இந்த அலுவலகத்திற்கு தினந்தோறும் ஏராளமானோர் ஓட்டுனர் உரிமம், வாகன தகுதி சான்று, வாகனங்கள் உரிமையாளர்கள் பெயர் மாற்றம் செய்தல், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், வாகன புகை சான்று உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.

சேதமடைந்த சாலை

அண்ணன் பெருமாள் கோவிலில் இருந்து இந்த அலுவலகம் வரை உள்ள சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த அலுவலகத்திற்கு வாகனத்திலும், நடந்தும் வருபவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்து

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அன்புராஜ் கூறுகையில், சீர்காழி அருகே வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். மேலும் இந்த சாலை வழியாக தான் இங்குள்ள விவசாயிகள் தங்களுடைய விளை நிலத்திற்கு உரம், பூச்சி கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களையும், விளைபொருட்களையும் வாகனங்களில் கொண்டு சென்று வருகின்றனர்.இந்த அலுவலக கட்டிடம் திறந்த நாள் முதல் இந்த சாலை சேதம் அடைந்து உள்ளது.இந்த அலுவலகத்திற்கு வரும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். 5

சீரமைக்க வேண்டும்

போதிய அளவு கட்டிட வசதி இருந்தும் முறையான சாலை வசதி இல்லாததால் மோட்டார் வாகன அலுவலகத்திற்கு வரும் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்