குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
குண்டும், குழியுமா சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மன்னார்குடி:
மேலதளிக்கோட்டையில் குண்டும், குழியுமா சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
மன்னார்குடி அடுத்த மேலதளிக்கோட்டையில் உள்ள சுடுகாடு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருமங்கலக்கோட்டைக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர்.
மேலும் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும், விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்து வருவதற்கும் இந்த சாலையை தான் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.
வாகன ஓட்டிகள் அவதி
சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்தசாலை சீரமைக்காமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சுடுகாட்டுக்கும் செல்லும் சாலையாக மட்டுமில்லாமல், விவசாயிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கயைும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே .சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.