ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா?

சீர்காழி அருகே கற்கோவில் ஊராட்சியில் ஆபத்தான நிலையில் காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-09-08 17:56 GMT

சீர்காழி:

சீர்காழி அருகே கற்கோவில் ஊராட்சியில் ஆபத்தான நிலையில் காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சேதமடைந்த குடிநீர் தொட்டி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கற்கோவில் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட மணல்மேடு சாலையில் தைலம்மைபுரம் என்ற இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில் இந்த குடிநீர் தொட்டி கடந்த சில ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்து காணப்படுகிறது. குடிநீர் தொட்டியின் தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.

இடிக்க வேண்டும்

இந்த குடிநீர் தொட்டி எந்த நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து மணல்மேடு செல்லும் பிரதான சாலையில் இந்த குடிநீர் தொட்டி உள்ளதால், இந்த வழியாக பொதுமக்கள் செல்லவே அச்சப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்