நீட் தேர்வுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களிடம் கையெழுத்து வாங்குவாரா? : மு.க.ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி

நீட் தேர்வுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களிடம் கையெழுத்து வாங்குவாரா என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.;

Update:2023-10-22 02:39 IST

சென்னை,

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு 20.8.2023 அன்று மதுரையில் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்ததை முன்கூட்டியே தெரிந்துகொண்ட தி.மு.க. அரசின் முதல்-அமைச்சருடைய வாரிசு, தமிழகம் எங்கும் நீட்டிற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார். விரைவில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை அறிந்து, மீண்டும் நீட் எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ள வாரிசு, நீட்டிற்கு எதிராக 50 லட்சம் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி உள்ளார்.

இந்தியா முழுமைக்கும் நீட் தேர்வை கொண்டு வந்த காங்கிரஸ்-தி.மு.க. உள்ளிட்ட 26 கட்சிகளின் கூட்டணி, மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நீட்டை ஒழிப்போம் என்று 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் தயாரா? அல்லது 'இந்தியா' கூட்டணி கட்சிகளுடன் டெல்லியில் உண்ணாவிரதம் இருக்க தயாரா? அல்லது குறைந்தபட்சம் 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களிடம் நீட்டிற்கு எதிராக கையெழுத்தாவது வாங்குவாரா? என்று தமிழக மக்களிடமும், மாணவச் செல்வங்களிடமும் தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்