கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படுமா?

வடபாதிமங்கலம் அரசு பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-10-21 18:45 GMT

வடபாதிமங்கலம் அரசு பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடுநிலை, உயர்நிலைப்பள்ளி

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் ஒரே வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு வடபாதிமங்கலம், புனவாசல், கிளியனூர், ஓகைப்பேரையூர், பூசங்குடி, மாயனூர், உச்சுவாடி, சோலாட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட பழமையான வகுப்பறை கட்டிடங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டன. மேலும் ஒரு சில கட்டிடங்கள் சேதமடைந்தும், ஒரு சில கட்டிடங்கள் பழுதடைந்த நிலையிலும் உள்ளது.

கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்

இதனால் போதுமான வகுப்பறை கட்டிடங்கள் இல்லாத நிலையில், மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலில் வைத்து வகுப்புகள் எடுக்கப்படுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். போதுமான வகுப்பறை கட்டிடங்கள் இல்லாமல் உள்ளதால் மாணவர்கள் சவுகரியமாக படிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாமல் உள்ளதாக பெற்றோர்கள் கருதுகின்றனர்.

பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளாக உள்ள பழுதடைந்த கட்டிடம் அகற்றப்படாமலேயே உள்ளன. எனவே பழுதடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்