கடம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்ைடயாட நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

கடம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசாா் கைது செய்தனா்.

Update: 2023-06-17 21:48 GMT

டி.என்.பாளையம்

கடம்பூர் அருகே உள்ள அத்தியூர் கேர்மாளம் பகுதியில் ஒரு வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக கடம்பூர் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் கேர்மாளத்தில் வசிக்கும் பெரியசாமி (வயது 49) என்பவருடைய வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கி ஒன்று பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் பெரியசாமியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், வனவிலங்குகளை வேட்டையாட பெரியசாமி நாட்டு துப்பாக்கியை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பெரியசாமியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கி, தோட்டாவுக்கு பயன்படுத்தும் வெடிமருந்து ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரியசாமியை மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்