கடையநல்லூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்

கடையநல்லூர் அருகே தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன.;

Update:2022-05-23 19:58 IST

அச்சன்புதூர்:

கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான பெரியாறு மற்றும் கல்லாறு பகுதிகளில் விவசாயிகள் தென்னை, வாழை, மா பயிரிட்டுள்ளனர். இங்கு 2 குட்டிகளுடன் சுற்றித்திரிந்த 7 யானைகளை கடந்த 3 நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் வெடிவைத்தும், சைரன் ஒலித்தும் விரட்டினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்துல் கரீம் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து ஏராளமான வாழை மரங்களை பிடுங்கி அட்டகாசத்தில் ஈடுபட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் பீட் வனவர் முருகேசன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கேயே முகாமிட்டு யானைகளை வெடிவைத்து இரவு பகலாக விரட்டி வருவதாக கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்