கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் காட்டு யானைகள் முகாம் - சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை

பேரிஜம் ஏரி பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பினர்.;

Update:2023-09-10 20:47 IST

திண்டுக்கல்,

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான பேரிஜம் ஏரி பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் அந்த பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் பேரிஜம் ஏரி பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பியதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்