வீட்டை உடைத்த காட்டு யானைகள்

நெலாக்கோட்டை அருகே காட்டு யானைகள் வீட்டை உடைத்தன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

Update: 2023-06-23 21:15 GMT

பந்தலூர்

நெலாக்கோட்டை அருகே காட்டு யானைகள் வீட்டை உடைத்தன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

காட்டு யானைகள்

பந்தலூர் அருகே நெலாக்கோட்டை கூவச்சோலை, விலங்கூர், மேபீல்டு, 9-வது மைல் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. அங்குள்ள தோட்டங்களில் பயிரிடப்பட்டு உள்ள தென்னை, வாழை, பாக்கு மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. நெலாக்கோட்டையில் இருந்து கூடலூர், பாட்டவயல் செல்லும் வாகனங்களை வழிமறித்து வருகின்றனர். சில நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகளை துரத்தி வருகிறது. இதனால் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நெலாக்கோட்டை அருகே விலங்கூர் பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்தன. தொடர்ந்து அங்குள்ள குடியிருப்புகளை முற்றுகையிட்டது. அந்த பகுதியில் அச்சுதன் என்பவரது வீட்டை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தின. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த அச்சுதன் மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சத்தில் வீட்டுக்குள் பதுங்கி இருந்தனர்.

நிவாரணம் வழங்க வேண்டும்

பின்னர் அப்பகுதி மக்கள் சத்தம் போட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ் பிரவீன்சன், வனக்காப்பாளர் பொம்மன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், யானைகள் உடைத்த வீட்டின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர்.இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஏற்கனவே நெலாக்கோட்டை பகுதியில் காட்டு யனைகள் ரேஷன் கடை நுழைவுவாயிலை உடைத்து இருந்தது. மீண்டும் அதே பகுதியில் புகுந்து வீட்டை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்