காட்டு யானைகள் அட்டகாசம்

காட்டு யானைகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Update: 2023-06-19 22:15 GMT

பந்தலூர்

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே உள்ள பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மழவன் சேரம்பாடியை ஒட்டியுள்ள சாமியார் மலை அடிவார பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்தநிலையில் பாட்டவயல், பிதிர்காடு, நெலாக்கோட்டை, விலங்கூர் பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்தன. தகவல் அறிந்த பிதிர்காடு, சேரம்பாடி வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் இரவு நேரங்களில் முகாமிட்டு கண்காணித்து யானைகளை விரட்டி வருகின்றனர். அந்த சமயங்களில் காட்டு யானைகள் வனத்துறையினரை துரத்துகிறது. இதனால் அவர்களையும் தாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, ஊருக்குள் காட்டு யானைகள் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்