காட்டு யானைகள் அட்டகாசம்

கடையம் அருகே, காட்டு யானைகள் தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்தன. இதில் தென்னை மரங்கள் சேதம் அடைந்தன.

Update: 2023-03-06 18:45 GMT

கடையம்:

கடையம் அருகே, காட்டு யானைகள் தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்தன. இதில் தென்னை மரங்கள் சேதம் அடைந்தன.

விலங்குகள் அட்டகாசம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை, காட்டெருமை என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

அவ்வப்போது வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் பொதுமக்களையும் சில நேரங்களில் தாக்கி அட்டகாசம் செய்கின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடையம் அருகேயுள்ள கருத்தபிள்ளையூர், பெத்தான்பிள்ளை குடியிருப்பு, கடுவா காடு உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் கொண்ட கூட்டம் விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின.

விரட்டும் பணி

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 10 யானைகள் கொண்ட கூட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கருத்தபிள்ளையூருக்கு தென்புறத்தில் உள்ள அடிவாரப்பகுதிகளுக்கு வந்தன. இதனை பார்த்த விவசாயிகள் கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அங்கு வந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் கருத்தபிள்ளையூரை சேர்ந்த சிலரது தோட்டங்களில் நேற்று அதிகாலை புகுந்த யானை கூட்டம், தென்னை உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி உள்ளன.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்