வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் காட்டு யானை உலா
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் காட்டு யானை உலா
வால்பாறை,
வால்பாறை சுற்று வட்டார வனப் பகுதியில் கடந்த 8 மாதங்களாக முகாமிட்டு சுற்றித்திரிந்து வந்த காட்டு யானைகள் கூட்டம் கேரள வனப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டன. இந்த நிலையில் ஒரு சில எஸ்டேட் பகுதியில் உள்ள வனப் பகுதியில் 6-க்கும் மேற்பட்ட யானைகள் மட்டும் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் இரவு நேரத்திலும் அதிகாலை நேரத்திலும் வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் உலா வந்து கொண்டிருக்கிறது. எனவே வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் வால்பாறை பகுதி உள்ளூர் வாசிகள் தங்களுடைய வாகனங்களை கவனமாக செல்ல வேண்டும். யானைகள் சாலையில் அல்லது சாலையோரத்தில் நின்று கொண்டிருப்பதை பார்த்தால் வாகன ஓட்டிகள் ஹார்ன் அடிப்பது, டார்ச் லைட் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு யானைகளை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். புகைப்படம், வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும். என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.