ஆசனூர் அருகே சரக்கு வேனை வழிமறித்து உருளைக்கிழங்கை தின்ற காட்டு யானை

ஆசனூர் அருகே சரக்கு வேனை வழிமறித்து உருளைக்கிழங்கை தின்ற காட்டு யானை

Update: 2023-10-24 21:46 GMT

தாளவாடி

ஆசனூர் வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று வெளியேறியது. பின்னர் அந்த காட்டு யானை ஆசனூர் அருகே உள்ள சாலையில் வந்து நின்றது. இதைத்தொடர்ந்து அந்த வழியாக கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வருகிறதா? என சாலையில் உலா வந்தது. அப்போது தாளவாடியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு சரக்கு வேன் ஒன்று உருளைக்கிழங்கு பாரம் ஏற்றிக்கொண்டு அந்த வழியாக வந்து கொண்டிருந்தது.

இதை பார்த்ததும் அந்த காட்டு யானை, சரக்கு வேனை வழிமறித்தது. இதனால் டிரைவர் பயந்து வாகனத்தை நிறுத்தினார். அதன்பின்னர் சரக்கு வேனில் இருந்த மூட்டையை தனது துதிக்கையால் இழுத்தது. பின்னர் அதிலிருந்த உருளைக்கிழங்குகளை தின்றது. சிறிது நேரத்துக்கு பிறகு யானை அங்கிருந்து சென்றுவிட்டது. அதன்பின்னர் சரக்கு வேன் அங்கிருந்து சென்றது. இதனால் அந்த ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்