காட்டுப் பன்றிகள் அட்டகாசம்

திருக்குறுங்குடியில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம் செய்தது;

Update:2022-10-28 03:57 IST

ஏர்வாடி:

திருக்குறுங்குடியில் உள்ள கரிசபத்து, குட்டிகரிச்சகுளம் ஆகிய விளைநிலங்களில் நேற்று முன்தினம் இரவில் காட்டுப் பன்றிகள் கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது. இந்த வாழைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்த 4 மாத வாழைகள் ஆகும். நாசமான வாழைகள் கவுன்சிலர் நம்பிராஜன் என்பவருக்கு சொந்தமானது ஆகும். இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 500-க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டுப் பன்றிகள் நாசம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்