மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பண்ருட்டி காட்டுமயிலூரில் தலா 30 மில்லி மீட்டர் மழை பதிவானது

Update: 2022-06-07 17:25 GMT

கடலூர்

மழையால் மின் தடை

ஆந்திரா பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரமாக நீடித்தது. இருப்பினும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கடலூரில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதி அடைந்தனர். சில இடங்களில் குறைந்த மின்அழுத்தம் ஏற்பட்டது. பின்னர் மின்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு சீரமைத்து சீரான மின்வினியோகம் செய்தனர்.

மழைநீர் தேங்கியது

பண்ருட்டி, வேப்பூர், வானமாதேவி, புவனகிரி, விருத்தாசலம், சிதம்பரம், அண்ணாமலைநகர், சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை, குப்பநத்தம் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதை பார்க்க முடிந்தது.

இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பண்ருட்டி மற்றும் காட்டுமயிலூரில் தலா 30 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்த பட்சமாக காட்டுமன்னார்கோவில், லால்பேட்டையில் தலா 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

வேப்பூர்..................................... 25

மே.மாத்தூர்..............................20

வானமாதேவி..........................20

குடிதாங்கி.............................18.75

வடக்குத்து..................................16

கொத்தவாச்சேரி......................14

புவனகிரி.................................... 13

விருத்தாசலம்........................12.2

சிதம்பரம்.................................10.8

அண்ணாமலைநகர்..............8.6

பெலாந்துறை..........................8.2

சேத்தியாத்தோப்பு................6.8

பரங்கிப்பேட்டை.................5.6

குப்பநத்தம்...............................4.2

கலெக்டர் அலுவலகம் ......3.2

கடலூர்.........................................2

Tags:    

மேலும் செய்திகள்