சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 10-ந்தேதி (புதன்கிழமை) வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி , கிண்டி, குரோம்பேட்டை, பல்லாவரம், மந்தைவெளி, அடையாறு, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், எம்.ஆர்.சி.நகர், சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.