நாகூர்:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நாகை மாவட்டம் நாகூரில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. இதை தொடர்ந்து நேற்று காலையும் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.இதேபோல. தெத்தி, மேல நாகூர்முட்டம், பனங்குடி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.