துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? சம்பவ இடத்தில் நடந்தது என்ன..? கோவை காவல் ஆணையர் விளக்கம்...

நீதிமன்ற வளாகம் அருகே நடந்த கொலையில் தொடர்புடையவர்களைபோலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

Update: 2023-02-14 16:06 GMT

கோவை,

நீதிமன்ற வளாகம் அருகே நடந்த கொலையில் தொடர்புடையவர்களை, துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்துள்ளது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது,

நீதிமன்ற வளாகம் அருகே நடந்த கொலையில் தொடர்புடையவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்ததில், வழக்கில் தொடர்புடையது தெரியவந்தது. அவர்களை கோத்தகிரி காவல்நிலையத்திற்கு வரவழைத்து பின் தனிப்படையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

தனிப்படை போலீசார் அவர்களை கோத்தகிரியில் இருந்து கோவை நோக்கி வாகனத்தின் அழைத்துவந்தனர். மேட்டுப்பாளையம் கல்லூரி அருகே வந்துகொண்டிருந்தபோது, திடீரென வாந்தி வருவதாகவும், தலை சுற்றுவதாகவும், இயற்கை உபாதையை கழிக்கவேண்டும் என்றும் அவர்கள் கூறியதால், அங்கே வாகனம் நிறுத்தப்பட்டது.

அப்போது குற்றவாளிகளான கௌதம், ஜோசுவா ஆகிய இருவர் தப்பித்து ஓடினர். அவர்களை போலீசார் விரட்டினர். சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள புதரில் மறைத்துவைத்திருந்த அரிவாலை எடுத்து இருவரும் காவலர் யூசுப்பை தாக்கினர். இதனால் காவலருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து பின்னால் வந்த எஸ்.ஐ. உடனடியாக எச்சரித்தும், அவர்கள் நிறுத்தாததால், காவலரை காப்பதற்கும், அவர்களை கைது செய்வதற்கும், தற்காப்புக்காகவும் துப்பாக்கிச்சூடு தடத்தப்பட்டது.

இருவரையும் இடுப்பிற்கு கீழ் சுட்டதில், அவர்களின் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்