சிவப்பு நிறமாக மாறவிருக்கும் வெண்ணிலவு..! - நவ.8ல் வானில் நடக்கப்போகும் மாற்றம்

வரும் 8ம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.

Update: 2022-11-04 15:01 GMT

கோப்புப்படம் 

சென்னை,

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் நிலவும். நிலவின் மீது விழும் சூரிய ஒளியை பூமி முற்றிலும் தடுப்பதால் இம்முறை நிகழ்வது முழு சந்திர கிரகணம் ஆகும்.

இம்முறை 99.1 சதவீதம் சந்திரன் பூமியின் குடைக்குள் செல்வதால் நிலவு சிவப்பு நிறமாக காட்சியளிக்கும். இதேபோன்ற சந்திர கிரகணம் அடுத்து செப்டம்பர் 7 2025ல் தான் நிகழும்.

இந்த முழு சந்திர கிரகணத்தை வடக்கு - கிழக்கு ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பகுதி, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் இந்த கிரகணம் தெரியும்.

இந்தியாவின் சில பகுதிகளில் இந்த சந்திர கிரகணத்தின் இறுதி நிமிடங்களைக் காண வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்