மாந்தோப்பில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட போது 'பவர் டில்லர்' எந்திரம் தலையில் ஏறி தொழிலாளி சாவு
மாந்தோப்பில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட போது ‘பவர் டில்லர்’ எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
நெகமம்
மாந்தோப்பில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட போது 'பவர் டில்லர்' எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பராமரிப்பு பணி
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆகாஷ்குமார் (வயது 19). இவர் கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள காட்டம்பட்டி அரசூர் பகுதியில் தங்கியிருந்து அந்தப்பகுதியில் உள்ள தோட்டத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று அங்குள்ள மாந்தோப்பில் நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தும் பவர் டில்லர் எந்திரம் மூலம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டார்.
அப்போது பவர் டில்லர் எந்திரம் மீது அமர்ந்தபடி தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். இதில் அவர் எந்திரத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
தலையில் ஏறியதில் சாவு
அப்போது அவரின் தலை மீது அந்த எந்திரத்தில் டயர் ஏறி இறங்கியது. இதனால் படுகாயம் அடைந்த ஆகாஷ்குமார் சம்பவ இடத்திலேேய பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி அறிந்ததும் நெகமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த ஆகாஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.