உடுமலை பகுதியில் ஒருசில விவசாயிகள் மானாவாரியில் ஒருசில விவசாயிகள் ஆர்வத்துடன் கோதுமை சாகுபடி செய்துள்ளனர்.
உடுமலை பகுதியில் ஒருசில விவசாயிகள் மானாவாரியில் ஒருசில விவசாயிகள் ஆர்வத்துடன் கோதுமை சாகுபடி செய்துள்ளனர்.
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் ஒருசில விவசாயிகள் மானாவாரியில் ஒருசில விவசாயிகள் ஆர்வத்துடன் கோதுமை சாகுபடி செய்துள்ளனர்.
ஆயக்கட்டு
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.இங்கு தென்னை, கரும்பு, வாழை, மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதுதவிர பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகளில் அமராவதி அணை நீர் இருப்பைப் பொறுத்து ஆண்டுக்கு 2 முறை நெல் சாகுபடி செய்யப்படுகிறது.இந்தநிலையில் உடுமலை பகுதியில் ஒருசில விவசாயிகள் கோதுமை சாகுபடி மேற்கொண்டு வருகிறார்கள்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது'பொதுவாக மலைப்பிரதேசங்களில் குளிர்காலத்தில் மட்டுமே கோதுமை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.பின்னர் சமவெளிப் பகுதிகளிலும் பயிரிடும்படியான புதிய ரகக் கோதுமைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.இதனால் நன்கு வடிகால் வசதியுள்ள வண்டல் மற்றும் கரிசல் மண் பூமியில் குளிர் காலங்களில் கோதுமை சாகுபடி செய்யும் சூழல் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து வட மாநிலங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்த கோதுமை சாகுபடியில் தமிழக விவசாயிகளும் ஈடுபடத் தொடங்கினர்.
லாபகரமான பயிர்
உடுமலை பகுதியைப் பொறுத்தவரை மானாவாரியில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.இதுதவிர சோளம், கம்பு உள்ளிட்ட சிறுதானியப் பயிர்களை சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.ஒருசில விவசாயிகள் கடந்த ஆண்டுகளில் சோதனை முறையில் கோதுமை சாகுபடி செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.அதனடிப்படையில் அனுபவ விவசாயிகளிடமிருந்து விதைகளைப் பெற்று கோதுமை சாகுபடி செய்துள்ளோம்.6 மாத பயிரான கோதுமைக்கு ஏக்கருக்கு 12 கிலோ விதை தேவைப்படும்.வடகிழக்குப் பருவமழை கைகொடுத்த நிலையில் நடப்பு ஆண்டில் ஓரளவு சிறந்த மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.மற்ற சாகுபடிகளைப் போல அதிக அளவில் மருந்து, உரம் ஆகியவை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லாத பயிராகவே கோதுமை உள்ளது.இதனால் செலவு குறைவாகவே பிடிக்கும் நிலையில், லாபகரமான பயிராகவே கோதுமை சாகுபடி இருக்கும்'என்று விவசாயிகள் கூறினர்.