'அக்னிபத்' திட்டத்தின் நோக்கம் என்ன? சீமான் கேள்வி

"அக்னிபத்" விவகாரத்தில், கலவரத்தை ரசிப்பவர்கள் கையில் ஆட்சி இருந்தால் இப்படித்தான் நடக்கும் என்று சீமான் கூறினார்;

Update:2022-06-18 22:23 IST

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

நீதியரசர் பேரறிவாளனுக்கு வழங்கிய தீர்ப்பை மற்றவர்களுக்கு வழங்கலாம் என தெரிவித்துள்ளார். ஆனால் மறுபடியும் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு போட உள்ளதாக தி.மு.க. தெரிவித்து உள்ளது. ஆட்சிக்கு வரும் முன்பு 7 பேர் விடுதலை பற்றி பேசியவர்கள், ஆட்சிக்கு வந்த பின் தங்களது நிலைப்பாட்டை மாற்றி விட்டார்கள். தொடர்ந்து நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்களை நம்ப வைத்து கழுத்தறுத்ததுபோல் தி.மு.க.வின் செயல்பாடு உள்ளது. இவர்களின் விடுதலை தொடர்பாக நாம் தமிழர் கட்சி நீதிமன்றம் வரை சென்று போராடும்.

"அக்னிபத்" விவகாரத்தில், கலவரத்தை ரசிப்பவர்கள் கையில் ஆட்சி இருந்தால் இப்படித்தான் நடக்கும். கலவரம் நடக்கும் போது மத்திய அரசு அதை நிறுத்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இளம் வீரர்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ப்பதற்காக தான் பா.ஜ.க. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பா.ஜனதாவை சேர்ந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை அழைத்து தி.மு.க. நிகழ்ச்சி நடத்தியது. கலைஞர் சிலை திறக்க வேறு ஆட்களே கிடையாதா?. பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் கூட பிரதமரையோ, துணை ஜனாதிபதியையோ அழைத்ததில்லை. அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ்.சை குறை கூறுவது நியாயம் இல்லை. தி.மு.க.வே, பா.ஜ.க.வாக செயல்படுகிறது. பிறகு எதற்காக குறை கூறுகிறார்கள் என்பது தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்