மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று சென்னை வருகை..!
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று (புதன்கிழமை) சென்னை வருகிறார்.
சென்னை,
மேற்கு வங்காள கவர்னராக (பொறுப்பு) உள்ள இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று (புதன்கிழமை) சென்னை வருகிறார்.
விழாவில் கலந்துகொண்ட பின்னர் அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச இருக்கிறார். மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேச உள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் பணிகளை திமுக தொடங்கியுள்ள நிலையில் ஸ்டாலினுடன் கூட்டணி தொடர்பாக மம்தா பானர்ஜி பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன