மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி;

Update:2022-10-18 00:15 IST


சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 293 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்டஅலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மொத்தம் 39 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார் மேலும், தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளினை முன்னிட்டு மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 5 பள்ளி மாணவர்களுக்கும், 3 கல்லூரி மாணவர்களுக்கும் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். முன்னதாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தெருமுனை விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை, கலெக்டர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர்; .மணிவண்ணன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் காமாட்சி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்