மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி

சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் 14 பேருக்கு ரூ.8 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்

Update: 2022-07-25 17:53 GMT

சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் 14 பேருக்கு ரூ.8 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், உதவி ஆணையர் (கலால்) கண்ணகி, தொழிலாளர் நல உதவி ஆணையாளர் கோடீஸ்வரி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடம் இருந்து 362 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவி

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறையின் கீழ் பள்ளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சார்பில் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு கால்நடைகளை பராமரித்திட வட்டியில்லா கடனாக ரூ.3 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பீட்டிலான வங்கி கடனுதவிகளையும், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் மரணமடைந்த அமைப்புசாரா நலவாரிய தொழிலாளர்களின் குடும்பங்களை சேர்ந்த 4 வாரிசுதாரர்களுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நிரந்தர வைப்பு தொகை என மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், வருவாய்த்துறை சார்பில் திருப்பத்தூர் வட்டத்தை சோ்ந்த 10 பேருக்கு மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணையினையும் கலெக்டர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்