மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவி

சங்கரன்கோவிலில் மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2023-03-20 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை, மூன்று சக்கர சைக்கிள், காது கேட்கும் கருவிகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. சங்கரன்கோவில் உதவி கலெக்டர் சுப்புலட்சுமி, தாசில்தார் பாபு, நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி, மாவட்ட இளைஞரணி சரவணன், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சங்கரன்கோவில் நகரசபை சார்பில் புதிய பஸ்நிலையம் அருகே உலக வனநாளை முன்னிட்டு பசுமையை பாதுகாக்க மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் பரி பவுல் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியை பார்வையிட்ட கலெக்டர், அங்கு மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். தொடர்ந்து பள்ளியை ஆய்வு செய்தார். இதில் ஆணையாளர் ஹரிஹரன், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்