ஆதனூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஆதனூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

Update: 2022-05-24 10:33 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஆதனூர் ஊராட்சியில் தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆதனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்அமுதன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வி ரவி, ஆதனூர் கரசங்கால் ஒன்றிய கவுன்சிலர் மலர்விழி தமிழ் அமுதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு முழு மானியமாக தலா 3 தென்னங்கன்றுகள், காய்கறி விதைகள் மற்றும் மானிய விலையில் 8 பழச்செடிகள், விதைப்பதற்கு 5 கிலோ உளுந்து, 2 கிலோ மண்புழு உரம், மருந்து தெளிக்கும் மின்கல எந்திரம், நெகிழி கூடைகள் போன்றவற்றை வழங்கினார்.

இதில் படப்பை வேளாண்மை அலுவலர் சங்கீதா, வேளாண்மை உதவி அலுவலர்கள் வித்யாவதி, சரவணன், வட்டார தொழில்நுட்ப அலுவலர் கலியபெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்