விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி

ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-04-01 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் வேளாண்மை துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் சுழற்கலப்பை எந்திரம் மற்றும் பேட்டரியில் இயங்கும் நவீன மருந்து தெளிப்பான் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆலங்குளத்தை சேர்ந்த விவசாயி செல்லப்பாவிற்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் சுழற்கலப்பை எந்திரமும், அருணாசலபேரியை சேர்ந்த விவசாயி முத்துப்பாண்டியனுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பில் நவீன மருந்து தெளிப்பானும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அறிவழகன், துணை இயக்குனர் முருகன், உதவி வேளாண்மை அலுவலர் புஷ்பமாரி, தொழில் அதிபர் மணிகண்டன் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்