ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள்

தேன்கனிக்கோட்டையில் ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.

Update: 2022-06-03 17:40 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டையில் ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.

ஜமாபந்தி

தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் ஜமாபந்தி நடந்தது. பட்டா மாறுதல், முதியோர் ஓய்வு ஊதியம், வீட்டுமனை பட்டா, தனி பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு பொது மக்களிடம் 348 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உடனடியாக தீர்வு கான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வனத்துறை சார்பில் யானைகளை விரட்ட விவசாய பயிர்களை பாதுகாக்க அதிக வெளிச்சம் தரும் டார்ச் லைட்டுகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் குருநாதன், துயர்துடைப்பு தாசில்தார் கோபி, தலைமையிடத்து துணை தாசில்தார் வெற்றிவேல், மண்டல துணை தாசில்தார்கள் மதன்ராஜ், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் நடந்த வேப்பனப்பள்ளி உள்வட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி லைமை தாங்கினார். தாசில்தார் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் வேப்பனப்பள்ளி உட் கோட்டத்துக்கு உட்பட்ட பதிமடுகு, இனாம்குட்டப்பள்ளி, தீர்த்தம், அளேகுந்தாணி, நேரலகிரி, நாடுவனப்பள்ளி, குரியனப்பள்ளி, கங்கோஜி கொத்தூர், மணவாரனப்பள்ளி ஆகிய 9 கிராமங்களைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்டோர் இதில் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரியில் நேற்று தொடங்கிய ஜமாபந்தி சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய ஏராளமானோர் மனு அளித்தனர்.

ஓசூர்

ஓசூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) குமரேசன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று ஜமாபந்தியையை தொடங்கி வைத்தார். பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட தேவைகளுக்காக 123 பேர் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இதன் மீது உரிப நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் ஓசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, தனி தாசில்தார்கள் சுப்பிரமணி, தேன்மொழி, வட்ட வழங்க அலுவலர் பன்னீர்செல்வி, வருவாய் ஆய்வாளர்கள் சுப்பிரமணி, லோகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வருகிற 9-ந் தேதி வரை ஓசூர், பாகலூர், மத்திகிரி உள்வட்டங்களில் ஜமாபந்தி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்