மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கி, மனுக்களை வாங்கினார். மொத்தம் 222 மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக தீர்வு காண உரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,38,400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் முத்துமாதவன், ஷேக் அப்துல் காதர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.