நலத்திட்ட உதவி வழங்கும் விழா

ராமநாதபுரத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2023-05-07 18:45 GMT

ராமநாதபுரத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை நலத்திட்ட உதவி வழங்கும் விழா கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:- தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் ஈடு இணை இல்லாத சாதனைகளை செய்துள்ளது. அனைத்து மக்களும் போற்றக்கூடிய மக்கள் நல அரசாக உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து மக்களையும் சாதி, மத பேதமின்றி ஒருங்கிணைக்கும் மாபெரும் சக்தியாக திகழ்கிறார். சமத்துவ தலைவராகவும், தலைசிறந்த முதல்-அமைச்சராகவும் இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் வீறுநடை போட வைத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முன்னேறிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கு அடித்தளமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியவர் கருணாநிதி. அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு என தனியாக காவிரியில் இருந்து ரூ.2,400 கோடியில் குடிநீர் திட்டம் நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இவ்வாறு பேசினார். விழாவில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 981 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். இதில், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, யூனியன் தலைவர்கள் மண்டபம் சுப்புலட்சுமி ஜீவானந்தம், திருப்புல்லாணி புல்லாணி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்