த.ம.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்

த.ம.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2022-12-04 18:55 GMT

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் ஜான்பாண்டியன் பிறந்தநாள் விழாவையொட்டி நெல்லை மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் உள்ள தென் தலைமை அலுவலகத்தில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர்கள் சண்முக சுதாகர், நெல்லையப்பன் ஆகியோர் கலந்து கொண்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் 5 மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கல்வி உதவித்தொகை, 20 பெண்களுக்கு தையல் எந்திரங்கள், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் எந்திரங்கள், 100 பேருக்கு அரிசி, பருப்பு உள்பட ரூ.3 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் தலைமை செயலாளர் சேகர், மாநகர செயலாளர் துரைப்பாண்டியன், இளைஞர் அணி செயலாளர் முத்துப்பாண்டி, கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கிங் தேவேந்திரன், நிர்வாகிகள் ஆதிபாண்டியன், சின்னத்துரை, ஒன்றிய செயலாளர்கள் சண்முகராஜ், செல்வராஜ், யாபேஸ் பாண்டியன், பகுதி செயலாளர்கள் நாதன், சங்கர், முத்து வளவன், செல்வகுமரன், மகளிரணி செயலாளர் வசந்தி, சர்மிளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்