மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலி

கொல்லங்கோடு அருகே மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலியானார்.

Update: 2023-07-18 18:45 GMT

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு அருகே மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலியானார்.

கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 55),வெல்டிங் தொழிலாளி. இந்தநிலையில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ஜெகர்சன் என்பவரது விசைப்படகில் வெல்டிங் வேலை செய்வதற்காக பிராங்கிளின் சென்றுள்ளார். அங்கு வெல்டிங் வேலை பார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பிராங்களின் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி கிடந்தார். உடனே அப்பகுதியில் நின்றவர்கள் அவரை மீட்டு நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது மனைவி நிர்மலா நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்