தங்கப்பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளிக்கு வரவேற்பு
ஆசிய அளவிலான எறிபந்து போட்டி: தங்கப்பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளிக்கு வரவேற்பு
நேபாளம் காட்மாண்டுவில் கடந்த 21-ந் தேதி ஆசிய அளவிலான பாரா த்ரோபால் (எறிபந்து) போட்டி நடந்தது. இதில் நேபாளம், வங்காளதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன. இதில் இந்தியா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றது. இந்திய அணியில் தமிழகம் சார்பில் மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்திகேயன், கோவையைச் சேர்ந்த மோகன் ஆகியோர் கலந்துகொண்டு விளையாடினர். தங்கப்பதக்கம் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய கார்த்திகேயனுக்கு மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல பாதுகாப்போர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு கார்த்திகேயனுக்கு பாராட்டு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர் திறந்தவெளி வாகனத்தில் அழைத்துச்செல்லப்பட்டார்.