உப்பு சத்தியாகிரக பாத யாத்திரை குழுவினருக்கு வரவேற்பு
உப்பு சத்தியாகிரக பாத யாத்திரை குழுவினருக்கு வரவேற்பு
நீடாமங்கலம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் உப்பு சத்தியாகிரக பாதயாத்திரை குழுவினருக்கு நீடாமங்கலத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு நகர காங்கிரஸ் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் மருதப்பா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்கள் மணி, ராஜேந்திரன், பத்மநாபன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒவ்வொரு ஆண்டும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டு காங்கிரஸ் சேவாதள தலைவர் சக்தி செல்வகணபதி தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை உப்பு சத்தியா கிரக பாத யாத்திரை சென்று வருகின்றனர். இந்த குழுவிற்கு நீடாமங்கலத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.