மவுரிய பேரரசின் மாமன்னராக இருந்து புத்தரின் கொள்கைகளை பரப்பிய அசோக சக்கரவர்த்தியின் உருவச்சிலை மற்றும் அம்பேத்கர், பண்டிதர் அயோத்திதாசர் ஆகியோர் படங்கள் கொண்ட தம்ம யாத்திரை கேரள மாநிலம் சபரிமலையில் இருந்து புறப்பட்டு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை கடந்து மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே உள்ள தீக் ஷா பூமியில் நிறைவடைகிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து விராலிமலை, திருச்சி வழியாக பெரம்பலூருக்கு வந்த தம்ம யாத்திரை புத்த வாகனத்திற்கும், புத்த பிட்சுகளுக்கும் பெரம்பலூர் மாவட்ட புத்த சமய மக்கள் மற்றும் தம்ம பதத்தை கடைபிடிக்கும் பக்தர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் ரோவர் நூற்றாண்டு வளைவு பகுதியில் நடந்த இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் டாக்டர் கதிரவன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து தம்ம யாத்திரை விழுப்புரம் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றது.