திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

திருநெல்வேலி - மேட்டுபாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

Update: 2023-06-29 10:05 GMT

சென்னை,

திருநெல்வேலி - மேட்டுபாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ஜூலை , ஆகஸ்ட் , செப்டம்பர் ஆகிய மாதங்களின் ஞாயிற்றுக்கிழமையில் திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரெயில் (06030 ) அம்பாசமுத்திரம் , பாவூர்ச்சத்திரம் தென்காசி , ராஜபாளையம் , விருதுநகர் , திண்டுக்கல் , பழனி , பொள்ளாச்சி , கோவை வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கம் ஜூலை , ஆகஸ்ட் , செப்டம்பர் ஆகிய மாதங்களின் திங்கள்கிழமையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு (06029) புறப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்