இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவருக்கு வலைவீச்சு
சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்து இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு வழங்கினார். அதில், தனது படத்தை மர்மநபர் ஆபாசமாக சித்தரித்து தனக்கு அனுப்பி தொல்லை கொடுப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கூறியிருந்தார்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்.