பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விடமாட்டோம் - பி.ஆர்.பாண்டியன் திட்டவட்டம்
நிச்சயமாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விடமாட்டோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் இன்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது பரந்தூரில் விமான நிலையத்தை எதிர்த்து போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-
பரந்தூரில் விமான நிலையம் அமைத்தால் அங்குள்ள 13 கிராம மக்கள் அகதிகளாக வெளியேறும் பேராபத்து ஏற்படும். நீர்நிலைகள் முழுவதும் ஆக்கிரமிக்கப்படும். இதனால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் பேராபத்து ஏற்படும்.
வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் அவதிப்படும் சூழல் உருவாகும். எனவே பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முயற்சிகளை அரசு கைவிட வேண்டும். இதையொட்டி விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.